NATIONALPENDIDIKAN

மாரா பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாமன்னர் நியமனம்

 

ஷா ஆலாம் – மாரா இஸ்லாமிய தொழில்நுட்ப பல்கலைக்கத்தின் 5வது வேந்தராக மாமன்னர் சுல்தான் முகமாட் V இன்று அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டார்.மாரா பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு நிகவின் போது மாமன்னர் அப்பல்கலைக்கத்தின் வேந்தாரா பெருமிதமாய் அறிவிக்கப்பட்டார்.

மாரா பல்கலைக்கழக்கத்தோடு இணைந்தது பெருமையாக இருப்பதாக கூறிய மாமன்னர் உல தரத்தில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சிறந்த நிலையை எட்டுவதே நமக்கு இலக்காக இருக்க வேண்டும் என்றும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

 

மாரா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தை தனித்துவமான இடத்தை எட்டுவதற்கு பெரும் பங்காற்றுவார்கள் எனும் நம்பிக்கையை முன் வைத்த மாமன்னர் புதியதொரு தளம் நோக்கி மாரா பயணிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை என்றார்.

மேலும்,மாரா பல்கலைக்கழகம் தொடர்ந்து கல்வியல் நிலையில் சிறந்த ஆளுமையையும் மலேசியர்களின் முதன்மை தேர்வாகவும் இருப்பதை நிலைநிறுத்த வேண்டும் என்றும் பூமிபுத்ராக்களின் உரிமையை அஃது காக்கவும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 


Pengarang :