RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரின் நிலைத்தன்மைக்கு மந்திரி பெசாரின் விளக்கத்தை கெஅடிலான் ஏற்றுக் கொண்டது

ஷா ஆலம், மே 24:

கெஅடிலான், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் அரசியல் பிரிவு கூட்டத்தில் கொடுக்கப் பட்ட விளக்கதிற்கு பிறகு ஏற்றுக் கொண்டதாக கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். சிலாங்கூர் மந்திரி பெசார் கூற்றின் படி 13 பாஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று ஆட்சிக் குழு உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எடுத்த முடிவை கருத்தில் கொண்டு இந்த முடிவு செய்ததாக கூறினார்.

ஜிங்கா புத்தகத்தை அடிப்படையில் இயங்கும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து நிலைத்தன்மையாக இருக்கவும் மந்திரி பெசார் முகமட் அஸ்மின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது தெளிவாக தெரிகிறது என்று விவரித்தார்.

”   கெஅடிலான் கட்சியின் அரசியல் பிரிவு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் அணுகுமுறையை ஆதரிப்பது என்றும் 14-வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் நிலைத்தன்மையான ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக ஒத்துக் கொள்ள வேண்டும். நாம் முகமட் அஸ்மின் தொடர்ந்து சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பொறுப்பில் இருக்க அதிக நம்பிக்கை வைத்து இருக்கவும் மாநிலத்தின் மேம்பாடு மக்கள் நலன் சார்ந்த இருக்கும் நிலை தொடர வேண்டும்,” என்று கூறினார்.

இந்த முடிவு மூன்று பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் வெகு விரைவில் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்வதாக வெளியான வதந்திகளுக்கு இதோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கு முன்பு ஷுரா உலாமாக் பேரவை கெஅடிலான் கட்சியின் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :