MEDIA STATEMENT

ஜிஎஸ்டி பொருட்களை அதிகப் படுத்துதல், உணவகங்கள் பொருட்களின் விலையேற்றத்தை எதிர்ப்பார்க்கலாம்

60 வகையான பொருட்கள் எதிர் வரும் ஜூலை 1-இல் இருந்து பொருட்கள் மற்றும் சேவை வரி  (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிவிப்பு செய்துள்ள பொருட்களில் கடல் உணவுகள் (விலாங்கு, மீன்), கீரை வகைகள் (உருளைக்கிழங்கு, பயிற்றங்காய், கச்சான்,தண்டுக் கீரை, இனிப்பு சோளம்), இறக்குமதி செய்யப்படும் பழ வகைகள் (அவோகாடோ, அராப்பழம், திராட்சை, சேரி மற்றும் பேரி), தேயிலை, காப்பி, மசாலா மற்றும் மீட்பு ( மீ ஹூன், கொய்தியாவ் & லக்ஸா மீ போன்றவை அடங்கும்) மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட பொருட்களை மலேசியர்கள் அதிகமாக பயன்படுத்தவில்லையா? அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் மிகவும் தந்திரமாக ஒவ்வொரு மக்களின் அத்தியாவசிய பொருட்களை ஜிஎஸ்டி விதிக்கப்படும் பட்டியலில் சேர்த்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அம்னோ தேசிய முன்னணியின் இந்த நடவடிக்கையை கண்டித்தது மட்டுமில்லாமல் சாமானிய மக்கள் சாப்பிடும் உணவு பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி திணிப்பதை எதிர்க்கிறேன். ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்ந்து உணவகங்கள் அல்லது அங்காடி கடைகள் விற்கப்படும் உணவுகள் கண்டிப்பாக விலை உயர்வு காணும்.

இதனிடையே அன்றாட குடும்பங்களின் செலவீனங்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்ந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பெரும் சுமைகளை கொண்டு வருகிறது என்றால் மிகையாகாது.

அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டின் நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய சாமானிய மக்கள் மீது ஜிஎஸ்டி அரக்கனை கொண்டு வஞ்சித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

* வில்லியம் லியோங்

செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர்

# கேஜிஎஸ் 


Pengarang :