SELANGOR

புக்கிட் புரோகா மனமகிழ் பூங்காவாக பிரகடனம்

செமின்ஞே, ஆகஸ்ட் 19:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் புக்கிட் புரோகாவை மனமகிழ் பூங்காவாக தேசிய நில அதிகாரம் செக்சன் 63 கீழ் பிரகடனம் செய்தது. மாநில அரசாங்க செயலாளர் அதன் காப்பாளராகவும் மற்றும் காஜாங் நகராண்மை கழகம் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் என்று மாநில சுற்றுலா, சுற்று சூழல், பசுமை தொழில் நுட்பம் மற்றும் பயனீட்டாளர் நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் கூறினார். இந்த முடிவு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

”   அதே நேரத்தில், 31 ஏக்கர் சக்காய் லேண்ட் புஃரூட் டிரீஸ் மற்றும் சக்காய் டுசூன் ஆகிய நிலங்களை ஓராங் அஸ்லி நிலங்களாக ஊர்ஜிதம் செய்யப்படும்,” என்று புக்கிட் புரோகாவின் அடிவாரத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

மாநில அரசாங்கம், தொடர்ந்து புக்கிட் புரோகா மனமகிழ் பூங்காவை பாதுகாக்கும் என்றும் ஓராங் அஸ்லி சமுதாயத்தின் நலனுக்காக பாடுபடும் என்று உறுதி கூறினார்.

IMG_1174

 

 

 

 

 

இதனிடையே, செய்தியாளர் கூட்டத்தில் எலிசபெத் வோங் புக்கிட் புரோகா நேற்றுடன் மூடப்பட்ட நிலையில் மறுசீரமைப்பு பணிகள் தொடர இது வழி வகுக்கும் என்று தெரிவித்தார். சட்ட விரோதமாக இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பு செய்ததால் நிலைமை மோசமாகி மூடும் நிலக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறுசீரமைப்பு பணிகள் முடிவடைய மூன்று மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது.

#கேஜிஎஸ்


Pengarang :