SELANGOR

சிலாங்கூர் மாநில அரசின் சிறு தொழில் வியாபார மேம்பாட்டு திட்டத்தின் உதவிகள்

 

கோலா குபு பாரு, ஆகஸ்ட் 22:

 

சிலாங்கூர் மாநில அரசின் சிறு தொழில் வியாபார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைந்துள்ள Blueprint உதவி(சிறு இயந்திர பொருட்கள் உதவி) இன்று மாண்புமிகு கனபதிராவ் அவர்களின் தலைமையில் கோலா குபு பாரு பல்நோக்கு மண்டபம் மற்றும் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட 66 சிறு தொழில் வியாபாரிகள் இந்த இயந்திர உதவிகளை பெற்றுக் கொண்டனர். உதவியினை பெற்றுக் கொண்டனர். உலு சிலாங்கூர் மாவட்ட சிறு தொழில் வியாபாரிகளுக்கு மொத்தம் ரிம 229,100 மதிப்பிலான இயந்திரங்களை பரிவு மிக்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசாங்கம் பல்வேறு பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களை (ஐபிஆர்) செயல் படுத்தி வரும் நிலையில் இந்திய சமுதாயம் இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் திட்டமிட்டு பயன் பெற முடியும் என்று மாண்புமிகு கணபதிராவ் உறுதியாக கூறினார்.

தகவல்: கலைவாணி


Pengarang :