RENCANA PILIHANSELANGOR

இகியாவின் ரிம 1 பில்லியன் முதலீடு, சிலாங்கூர் மீதுள்ள நம்பிக்கையை ஏற்படுத்துகிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 24:

இகியா நிறுவனம் சிலாங்கூரில் உள்ள பூலாவ் இண்டா தொழில் பேட்டையில் ஆசிய பசிபிக் விநியோக மையத்தை அமைக்க ரிம 1 பில்லியனை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

மந்திரி பெசார் அலுவலகத்தின் அறிக்கையின் அடிப்படையில், இகியா பூலாவ் இண்டாவில் அமையப் போகும் மையம் உலகத்திலே இகியா சிக்காகோ, அமெரிக்கா மற்றும் இகியா டுசல்டோர்ஃப், ஜெர்மனி அடுத்து மூன்றாவது மிகப் பெரிய விநியோக மையமாக உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

இந்த விநியோக மையம் ஆசியான் வட்டாரத்தில் உள்ள 12 இகியா கிளைகளுக்கு உற்பத்தி பொருட்களை விநியோகம் செய்யும்.

 

MB IKEA (1)

 

 

 

 

 

 

 

 

”  இந்த முதலீடு சிலாங்கூர் மாநிலத்திற்கு விவேக மாநில அந்தஸ்தை மேலும் திறன் மிக்க அளவில் கொண்டு செல்லும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் மற்றும் உள்நாட்டு தொழில்துறை வளர்ச்சி மேம்பாடு அடையும். இகியா நிறுவனத்தின் தேர்வு, சிலாங்கூர் மாநில தலைமைத்துவத்தின் மீது உள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது,” என்று அஸ்மின் அலி கூறினார்.

பேசல் சுவிட்சர்லாந்து இகியா தலைமையகத்தில் வருகை புரிந்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மேற்கண்டவாறு டிவிட்டரில் பதிவு செய்தார்.

மந்திரி பெசாருடன், சிலாங்கூர் மாநில முதலீடு, தொழில்துறை, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் தேங் சாங் கிம், மாநில அரசாங்க துணைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன் பயணத்தில் உடன் இருந்தனர்.

#கேஜிஎஸ்


Pengarang :