SELANGOR

மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கத்தின் ரிம 300,000 மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது

உலு சிலாங்கூர், ஆகஸ்ட் 25:

கெர்னி புதிய கிராமத்தின் பாலத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ரிம 296,000 செலவில் நிறுவியது. மத்திய அரசாங்கத்தின் கீழ் நீர்ப்பாசன மற்றும் வடிகால் இலாகாவின் பொறுப்பில் கட்டப்பட வேண்டிய பாலம், மாநில அரசின் செலவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில ஊராட்சி, சட்ட விரோத தொழிற்சாலை மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா பேசுகையில், மத்திய அரசாங்கம் நிறுவிய பாலத்தில் மேம்பாட்டு பணிகள் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில், எந்த ஒரு முயற்சிகளையும் செய்யவில்லை என்று கூறினார். ஆனாலும், மாநில அரசாங்கம் 1000 பொது மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று பெருமிதம் கொண்டார்.

HULU SELANGOR EAN (2)

 

 

 

 

 

”  மத்திய அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட்டு நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனாலும் இதை செய்யாமல் போனது துரதிஷ்டவசமானது, இருந்தாலும் மக்களின் நன்மைக்காக மாநில அரசாங்கம் எப்போதும் தயாராக இருக்கிறது,” என்று மேம்பாட்டு பணிகளை உலு சிலாங்கூர் மாவட்ட பொறியியலாளர் ஹாலிம் மஸ்ரியுடன் மேற்பார்வை கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

#கேஜிஎஸ்


Pengarang :