RENCANA PILIHANSELANGOR

1957 உணர்வை மதிப்போம்,நாட்டின் தன்மானத்தை காப்போம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 31:

நாட்டின் சுதந்திரத்தை பெற போராடிய உணர்வு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு முன்மாதிரியாக கொள்ள வேண்டும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

”  1957 சுதந்திரம் அடையும் பொழுது ஏற்பட்ட ஒற்றுமை அனைத்து மலேசியர்களாகிய விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஒருசேர பாடுபட்டது நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு அந்நிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி தாய்நாட்டின் தன்மானத்தை திரும்பி கொண்டு வந்தார்கள். நாட்டு பற்று மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி நாடு அந்நிய காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைய தூண்டுகோலாக அமைந்தது,” என்று கூறினார்.

perbarisan a

 

 

 

 

 

சிலாங்கூர் மாநில அளவிலான சுதந்திர தின கொண்டாட்டத்தில் டத்தாரான் கெமெர்டேகாஹான் ஷா ஆலமில் கலந்து கொண்டு பேசினார். அவரோடு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இஸ்கண்டர் அப்துல் சமத், ஜைடி அப்துல் தாலிப், டாக்டர் டரோயா அல்வி, அமிரூடின் ஷாரி, இயான் யோங் ஹியான் வா மற்றும் 10000 பொது மக்கள் கலந்து தேசிய தினத்தை கொண்டாடினர்.

#கேஜிஎஸ்


Pengarang :