SELANGOR

உங்களின் புன்னகை ரிம1000-ஐ #SmileSelangor மூலம் வெற்றி கொள்ளலாம்

ஷா ஆலம், செப்டம்பர் 1:

பொது மக்கள் #SmileSelangor புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு ரிம 1000 தொகையை வெற்றிக் கொள்ளலாம்.

போட்டியாளர்கள் தங்களின் புன்னகை புரிந்த வண்ணமாக உள்ள புகைப்படத்தை அக்கம்பக்கம் மற்றும் இன்ஸ்தாகிராமில் பதிவு ஏற்ற வேண்டும். ஒவ்வொரு படங்களிலும் ‘விஸி ஸ்மார்ட் சிலாங்கூர்’ சம்பந்தப்பட்ட சுலோகத்தை எழுத வேண்டும். அதற்கு முன்பு போட்டியிடும் நபர்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் அகப்பக்கத்தை ‘லைக்’ செய்து அல்லது இன்ஸாதாகிராமில்  ‘ஃபோலோ’ செய்ய வேண்டும்.

எல்லா படங்களும் #SmileSelangor மற்றும் #SmartSelangor என்று குறிப்பிட பட வேண்டும். இந்த போட்டி இன்று நண்பகல் 12 மணி தொடங்கி செப்டம்பர் 14 வரை நீடிக்கும்.

முதல் பரிசு ரிம 1000, இரண்டாம் பரிசு ரிம 300 மற்றும் மூன்றாம் பரிசு ரிம 200. மேலும் விவரங்களுக்கு பொது மக்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் அகப்பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

#கேஜிஎஸ்


Pengarang :