SELANGOR

280,568 தாவாஸ் உறுப்பினர்களை 2008-இல் இருந்து பதிவு செய்துள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 3:

சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் திட்டம் (தாவாஸ்) 2008-இல் இருந்து இது வரை 280,568 குழந்தைகளை பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 322 குழந்தைகள் மரணமடைந்து விட்டனர் என்றும் இன்னும் 280,246 உறுப்பினர்களாக இருப்பதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

புள்ளி விவரங்கள் படி, மலாய்காரர் (190,509), சீனர் (50,993), இந்தியர் (31,155) மற்றும் மற்ற இனத்தவர் (7,589) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, செப்டம்பர் 2 வரை தாவாஸ் 11,020 விண்ணப்பங்களை பெற்றதாகவும், அதில் 7,304 மட்டுமே தகுதி பெற்றவர்கள் ஆவர்.

TAWAS (1)

 

 

 

 

 

தாவாஸ் திட்டத்தை, சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் வாரியம் (யாவாஸ்) நிர்வகித்து வருகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகள் மூன்று வயதை அடையும் முன்பு சட்ட மன்ற உறுப்பினர் அல்லது ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். தாவாஸ் உறுப்பினர்கள் 18 வயது எட்டியதும் ரிம 1500 உதவி நிதி வழங்கப்படும்.

யாவாஸ் இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள குழந்தைகள் 18 வயதுக்கு முன்பு இறந்து விட்டால் ரிம 1500 இறப்பு நிதியாக குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும்.

#கேஜிஎஸ்


Pengarang :