NATIONAL

அஸ்மின்:மக்களின் நன்மைக்காக தீர்வு தேட வேண்டும், விளம்பரத்திற்கு அல்ல

ஷா ஆலம், செப்டம்பர் 3:

கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, பாஸ் கட்சியுடனான பேச்சு வார்த்தைக்கு தாம் அனுமதி அளித்ததாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்த கருத்தை வரவேற்றார். தனது டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில், அன்வார் சரியான நேரத்தில் உண்மையான தகவலை வெளியிட்டு தம்மை மாசுபடுத்தியவர்களின் செயலை தடுத்தார்.

அம்னோ தேசிய முன்னணியை 14-வது பொதுத் தேர்தலில் வீழ்த்த சிறந்த வியூகத்தை அமைக்க பாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்திய நடவடிக்கையை கட்சியின் சில பொறுப்பற்ற நபர்கள் சாடி வருவது குறிப்பிடத்தக்கது. தம்முடைய செயல் மக்கள் நலனுக்காக மட்டுமே விளம்பரத்திற்கு அல்ல என்றார்.

”   உண்மை பொய்ப்பிரச்சாரத்தை வெற்றி கொள்ளும். தீர்வு பிறக்க கடுமையான முயற்சி வேண்டும். விளம்பரம் தேவை இல்லை. மகாத்மா காந்தி சொன்னது போல, உனது நடவடிக்கையின் மூலம் என்ன நன்மை கிடைக்கும் என்று எதிர் பார்க்காதே, ஆனால் நீ எதையும் செய்யவில்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது,” என்று கெஅடிலான் அவைத் தலைவர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையை மேற்கோள்காட்டி டிவிட்டரில் கூறினார்.

நேற்று வெளியிட்ட அறிக்கையில் அன்வார், பாஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்திய அஸ்மின் அலியின் நடவடிக்கையை எப்போதும் ஆதரவு அளித்ததாக தெரிவித்தார். அம்னோ பிஎன் அரசாங்கத்தை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த முயற்சி சிலாங்கூரில் மட்டுமில்லாமல் தேசிய அளவில் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :