NATIONAL

தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அதிகாரப்பூர்வ பதவி ஓய்வு

கோலா லம்பூர், செப்டம்பர் 4:

டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், இன்று தனது தேசிய காவல்துறை தலைவர் பதவியை கோலா லம்பூர் காவல்துறை பயிற்சி மையத்தில் (பூலாபோல்) நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் பதவி ஒப்படைப்பார். இந்த பதவி ஒப்படைப்பு நிகழ்வை துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹாமிடி மற்றும் மலேசியா காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.

” ஆமாம், நாளை நான் பதவி ஓய்வு பெறுகிறேன். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய சமையல் கல்லூரியில் சமையல் கலையை கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

POLIS BIRU 2 4x4

 

 

 

 

 

 

 

 

இன்று மாலை 2.30 மணி அளவில் நடைபெறும் காலிட்டின் பதவி ஓய்வு விழா காவல்துறை அணிவகுப்புடன் பூலாபோல் திடலில் நடந்தேறும்.

சிராம்பானை பூர்வீகமாக கொண்ட காலிட், 40 ஆண்டுகள் மலேசியா காவல்துறையில் பணியாற்றி உள்ளார். டிசம்பர் 5, 1976-இல் இன்ஸ்பெக்டராக காவல்துறையில் சேர்ந்தார்.

டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் வகித்த முக்கிய பதவிகள்

1. நெகிரி செம்பிலான் மாநில  காவல்துறை தலைவர் – 2005

2. தேசிய குற்றவியல் விசாரணை பிரிவின் துணை இயக்குனர் – 2006

3. சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் – 2007

4. தேசிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி பிரிவு இயக்குனர் – 2010

5. தேசிய துணை காவல்துறை தலைவர் – 2011

6. தேசிய காவல்துறை தலைவர் – மே 17, 2013 (டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் பதவி ஓய்வு)

தகவல்: பெர்னாமா

#கேஜிஎஸ்


Pengarang :