ANTARABANGSA

சிங்கப்பூரின் 8-வது அதிபராக ஹாலிமா யாக்கோப்

சிங்கப்பூர், செப்டம்பர் 12:

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஹாலிமா யாக்கோப் சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக அறிவிக்கப்படுவார். மற்ற வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் தகுதி பெற தவறிவிட்டதால், சிங்கப்பூர் சரித்திரத்தில் முதல் பெண்மணி அதிபராக நியமிக்கப்படுவார்.

ஹாலிமா தனது அதிபர் பதவியை அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை தொடங்க இருக்கிறார் என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இவர் ஜிஆர்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் கடந்த 2013,ஜனவரி 14-இல் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகராக பதவி ஏற்றார்.

Halimah Yacob

 

 

 

 

 

ஹாலிமா சிங்கப்பூர் சரித்திரத்தில் முதல் தடவையாக மூன்று முறை சபாநாயகராக பதவி ஏற்றது மட்டுமில்லாமல் சிறுபான்மை சமூகத்தில் இருந்து அப்துல்லா தார்முகி மற்றும் மைக்கேல் பால்மரை அடுத்து அதிபராக நியமனம் பெறுகிறார்.

இவர் ஏற்கனவே சமூக மேம்பாடு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக 2011-இல் இருந்து 2013 வரை இருந்தார். 2001-இல் இருந்து ஜிஆர்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :