ANTARABANGSA

வட கொரியா, ஜப்பானை அழித்து விடும் என்று எச்சரிக்கை

சோல், செப்டம்பர் 16:

வட கொரியாவின் அரசாங்க இலாகா ஒன்று அணு ஆயுதத்தை கொண்டு ஜப்பான் நாட்டை தரைமட்டமாக்கி அமெரிக்காவிற்கு அதன் சாம்பலை அனுப்பி வைக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தின் மேற்கண்ட இரண்டு நாடுகளும் வட கொரியாவிற்கு எதிரான தடையை ஆதரவு அளித்ததன் விளைவாக இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தடை, கடந்த செப்டம்பர் 3-இல் பியோங்யாங் ஆறாவது முறையாக நடத்திய எரிபடை சோதனையை கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை அமைந்தது என்று அனைத்துலக செய்தி நிறுவனமான ரியூட்டர்ஸ் கூறியது.

கொரிய ஆசிய பசிபிக் அமைதி குழு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தை கலைக்கவும் பரிந்துரை செய்துள்ளது. கொரிய ஆசிய பசிபிக் அமைதி குழு, கம்யூனிஸ்ட் நாடான வட கொரியாவின் வெளியுறவு மற்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது என்றும் ரியூட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவின் இந்த அதிகாரப்பூர்வ அரசு இலாகா, பாதுகாப்பு மன்றத்தை ‘தீய சக்தி’ என்றும் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

AS KOREA UTARA

 

 

 

 

”   நான்கு தீவுகள் அணு குண்டுகளால் கடலுக்குள் மூழ்க வேண்டும். ஜப்பான் நமது அருகாமையில் இருக்க தேவையில்லை,” என்று அந்த குழுவின் முக்கிய தலைவர் அறிக்கை வெளியிட்டதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கெசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

northkoreamap

 

 

 

 

 

பியோங்யாங்கின் இந்த எச்சரிக்கை, ஜப்பான் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் வழிகாட்டலில் செயல்டுவதாகவும் அது அமெரிக்காவின் மோப்ப நாயாக மற்றும் துரோகியாக நடந்து கொண்டே இருக்கிறது என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான், வட கொரியாவின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்தது.

#கேஜிஎஸ்


Pengarang :