SELANGOR

பசுமை நிறைந்த சுற்றுலாவிற்கு சிலாங்கூர் மாநிலம் முதன்மை தேர்வு

ஷா ஆலாம், செப்டம்பர் 20:

சிலாங்கூர் மாநிலத்தில் கண்ணுக்கு ஈர்ப்பான பசுமையான சுற்றுலாத்தலங்கள் சுற்றுப்பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்கும் நிலையில் மாநில பசுமை அழகினை இரசிக்க சுற்றுப்பயணிகளை அதிகமாய் வரவேற்பதாக மாநில சுற்றுலாத்துறை இலாகாவின் தலைமை நிர்வாகி நூரூல் ஹஸ்ஃகின் முகமாட் டின் தெரிவித்தார்.

இயற்கையான பசுமையின் அழகை இரசித்து புதியதொரு அனுபவத்தை பெறுவதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் உயிர்கொண்டிருக்கு பசுமை தலங்களை கண்டுக்களிக்க சுற்றுப்பயணிகள் அதிகமாக வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.சிலாங்கூர் மாநிலத்தில் இயற்கை அழகும் பசுமை தலமும் இயற்கை அளித்த வரப்பிரசாதம் என்றும் அவர் கூறினார்.
சுற்றுலாவை

மேற்கொள்ளவிருப்பவர்களும் அதிக விலை கொடுத்து டிக்கெட் பதிவு செய்பவர்களை கொஞ்சம் காத்திருக்க சொன்ன அவர் நீங்கள் எதிர்பார்க்கு இயற்கை அழகு நிறைந்த பருமாற்றம் சிலாங்கூரிலும் வரப்போகிறது என்றும் அதிக செலவு செய்து வெளிநாடுகளுக்கு செல்வதை காட்டிலும் சிலாங்கூரில் அதேபோன்ற சூழலை குறைந்த செலவில் கண்டு இரசிப்பது விவேகம் என்றார்.

சிலாங்கூர் மாநிலம் அன்மையக்காலமாய் பச்சை பசுமை நிறைந்த சுற்றுலாதலமாக மாறி வருவதோடு இயற்கை வளங்களும் காடுகளும் மலைகளும் குன்றுகளும் சுற்றுப்பயணிகளின் இரசனைக்கு ஏற்ப இருப்பதோடு இயற்கை அழகினை இரசிக்கும் மனங்களின் இதமாகவும் விளங்குவதாக கூறினார்.மேலும்,இயற்கையின் அழகை புகைப்படம் பிடிக்கும் ஆர்வாலர்களுக்கும் சிலாங்கூர் மாநில முதன்மையாக விளங்குவதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி,சிலாங்கூர் மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்து இருப்பதோடு வனங்கியல் மற்றும் இயற்கை காடுகளோடு சுரப்பியலிலும் மேலோங்கியுள்ளது.மேலும்,பிஃரிம்,தாமான் போதானிக் ஷா ஆலாம்,உலு சிலாங்கூர்,உலு லாங்காட் ஆகியவற்றின் இயற்கை வளமும் இயல்பியலும் மேலும் சிறப்பு சேர்ப்பதாக கூறினார்.

தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தை சுற்றுலாத்துறையில் சிறந்த இலக்கை எட்டுவதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை மாநில சுற்றுலாத்துறை மேற்கொண்டு வருவதாகவும் மேற்கொள்ளப்படும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளின் பயனால் உள்ளூர் மற்றும் வெளிநாடு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 1.5 விழுகாடு அதிகரித்து 4.3 மில்லியனாக அவை பதிவாகியுள்ளதாகவும் பெருமிதமாக கூறினார்.

#ரௌத்திரன்


Pengarang :