SELANGOR

சிலாங்கூர் 37,804 டெங்கு சம்பவங்களை பதிவு செய்தது

ஷா ஆலம், செப்டம்பர் 24:

சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து அதிகமான டெங்கு சம்பவங்களை பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி தொடங்கி செப்டம்பர் 23 வரை 37,804 டெங்கு சம்பவங்கள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய  டெங்கு நடவடிக்கை அறையின் புள்ளியல் விவரங்கள் படி மொத்தம் 69,255 சம்பவங்கள் இது வரை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிலாங்கூர் மாநிலத்தை அடுத்து கோலா லம்பூர் (6544), ஜோகூர் (6219), பேராக் (4793), நெகிரி செம்பிலான் (2714) மற்றும் கிளந்தான் (2238) சம்பவங்கள் பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 16 வரை டெங்கு காய்ச்சலால் 153 இறப்பு சம்பவங்கள் நடந்ததாகவும் தேசிய நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

Denggi Daroyah

 

 

 

 

 

 

இதனிடையே, மாநில மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு தங்களின் சுற்று புறத்தை சுகாதார முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் கொசு இன விருத்தி செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :