ANTARABANGSA

பிரதமர் இன்று ஜப்பானின் தேர்தலை அறிவிப்பார் என்று கணிக்கப் படுகிறது

தோக்கியோ, செப்டம்பர் 25:

ஜப்பானின் பிரதமர் ஷின்ஸொ அபே நாட்டின் தேர்தல் திகதியை அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமக்கு சாதகமாக இருக்கும் சூழ்நிலை மற்றும் எதிர் கட்சிகளின் ஒற்றுமையின்மை இதற்கு உந்துகோலாக அமைகிறது. ஆனாலும் இந்த பிரச்சினைக்கு ஷின்ஸொ அபேதான் காரணம் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அனைத்துலக செய்தி நிறுவனமான ரியூட்டர்ஸ் தனது அறிக்கையில் ஜப்பான் தற்போது வட கொரியா எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் இருக்கிறது.

ஷின்ஸொ அபே தனது கட்சியின் தலைமைத்துவ கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. கல்வி மற்றும் குழந்தைகள் பராமரிக்கும் உதவி நிதிகளை அறிவிப்பார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. வட கொரியாவுடன் கண்டிப்பான போக்கும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஷின்ஸொ அபேவிற்கு 50% ஆதரவு ஏற்பட்டுள்ளது எனவும், இதற்கு முன்பு 30% மட்டுமே இருந்ததாகவும், மேலும் இந்த ஆதரவை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :