PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ நான்கு பேருந்து மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்தது

ஷா ஆலம், செப்டம்பர் 29:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) செக்சன் 7, செக்சன் 24 மற்றும் தாமான் ஸ்ரீ மூடா ஆகிய பகுதிகளில் நான்கு பேருந்துகளை பறிமுதல் செய்தது. மேலும் தாமான் ஸ்ரீ மூடாவில் ஒரு லாரியை கனரக வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டது என்று தொழில்முறை பொதுத் தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அமாட் கூறினார். பொது இடங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் மீது எடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

”  கனரக வாகனங்களை நிறுத்தியதால் கார் நிறுத்துமிடங்கள் வீடமைப்பு பகுதியில் பற்றாக்குறை ஏற்படுகிறது குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பில் பெரும்பாலும் நடக்கிறது. இது மட்டுமில்லாமல் பசுமை இடங்களையும் கனரக வாகனங்கள் நிறுத்தியதால் பாதிக்கப்படுகிறது. மேலும் வாகனங்கள் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விடும் அளவிற்கு சில இடங்களில் ஏற்படுகிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

MBSA TUNDA (1)“Ia

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் அமலாக்க பிரிவு, சட்டத்துறை பிரிவு, தொழில்முறை பொதுத் தொடர்பு பிரிவு, தரைப் போக்குவரத்து சேவை ஆணையம், மலேசிய அரச காவல்துறை மற்றும் சாலை  போக்குவரத்து இலாகா ஆகியவை பங்கேற்றனர் என்று ஷாரின் கூறினார்.

அப்புறப்படுத்தப்படாத கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட கட்டணமாக ரிம 300 விதிக்கப்படும் என்றார். இந்த கட்டணம் ரிம 2000 கூட உயரலாம். மேலும் நாள் ஒன்றுக்கு ரிம 50 சேவை கட்டணமாக விதிக்கப்படலாம் என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :