ANTARABANGSA

டோனல்ட் டிரம்ப் நவம்பரில் ஆசிய பயணம்

உலகம், அக்டோபர் 1:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வ பயணமாக ஆசிய நாடுகளுக்கு வருகை புரிகிறார். இந்த பயணத்தில் ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட வேளையில் மலேசியாவை தவிர்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை மாளிகையில் அதிபர் பதவியை எடுத்த பிறகு, முதல் ஆசிய பயணமாக இருந்தது. டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் எதிர் வரும் நவம்பர் 3-இல் இருந்து 14-வரை  ஆசிய பயணத்தை மேற்கொள்வார் என்று ரியூட்டர்ஸ் அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப், வியட்நாமில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டிலும் பிலிப்பைன்சில் தென் கிழக்கு ஆசியா ஐக்கிய நாடுகள் சபையின் சந்திப்பிலும் கலந்து கொள்வார் என்று செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த அறிக்கையை வெள்ளை மாளிகை பேச்சாளர் உறுதிப் படுத்தினார்.

#கெஜிஎஸ்


Pengarang :