Uncategorized @ta

‘லான்’ சூறாவளி, ஓகினாவாவை ஞாயிறு தாக்கும்

தோக்கியோ, அக்டோபர் 20:

லான் சூறாவளி எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐப்பானில் ஓகினாவா நகரை தாக்கும் என்று ஜப்பான் வானிலை மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் ஒரு நாள் முன்பே தேர்தல் வாக்களிப்பு நடத்தப் படுகிறது. தற்போது கிழக்கு பிலிப்பைன்ஸ்ஸில் இருந்து 200 கி.மீட்டர் மணி வேகத்தில் ஜப்பானை நோக்கி வருகிறது.

”  ஜப்பான் நாட்டின் தென் பகுதியில் கடுமையான மழை பெய்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு ஜப்பானில் நாளை தொடங்கி திங்கள் வரையில் இது தொடரும். பல பகுதிகளில் கடுமையான மழை பெய்யும்,” என்று ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

#கெஜிஎஸ்


Pengarang :