MEDIA STATEMENT

ஆசியான் நாடுகளிலே வாழ்க்கை செலவீனங்கள் மிக குறைந்த நாடு என்ற பறைசாற்று, மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் என்ன பயன்?

வாழ்க்கை செலவீனங்கள் ஆசியானிலே மிகக் குறைவு என்ற பறைசாற்று,  மக்களின் விலைவாசி  சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பார்க்கும் பொழுது  எந்த ஒரு  அர்த்தம் இல்லை. மேலும் அரசாங்கத்தின் பல்வேறு சலுகைகளை நீக்கப்பட்டுள்ளது சுமைகளை அதிகரித்துக் கொண்டே போகிறது.

நாட்டு மக்கள் வாழ்க்கை செலவீனங்களால் ஏற்படும் பாதிப்புகள் பல்வேறு  அனைத்துலக  அங்கீகாரம் என்ற இனிப்பான செய்திகளைக் கொண்டு மூடினாலும் இதற்கு முன்பு இருந்த சூழ்நிலையை நன்கு புரிந்து உள்ளனர்.

133 மாநகரங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை ஒப்பீடு மக்களின் நிதர்சனமான உண்மை நிலையை காட்டவில்லை. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பாதிப்பு இப்படிபட்ட  அங்கீகாரம்  எந்த  ஒரு நல்வாழ்வை தரப் போவது இல்லை.

டத்தோ ஸ்ரீ நஜிப்  அவர்களின் அறிக்கை, மேற்கண்ட ஆய்வின் படி வருமானத்தை  அதிகரிக்கவும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் விடுத்திருப்பதாக கூறுவது வெறும் வெற்று வாக்குறுதிகளே ஆகும்.

நஜிப் நிர்வாகத்தின் கீழ் அம்னோ தேசிய முன்னணி (பிஎன்) அரசாங்கம்  இது வரை மக்களின் வருமானத்தை  அதிகரிக்கும் முயற்சிகள்  என்ன செய்து கொண்டிருக்கிறாகள்? விலைவாசியை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் நஜிப்  அரசாங்கம்   எடுத்துள்ளது ?

பிரிம் உதவித் தொகை தொடர்ந்து மக்களின் வாழ்க்கை சுமைகளை களைவதில் தோல்வி அடைந்துள்ளது. 1எம்டிபி ஊழல் மக்களின் வெறுப்பை வளர்க்கும் எனவும்  அதிகரிக்கும் ஆளும் கட்சியின் நெருங்கிய தொடர்பு  உள்ளவர்களின்  லஞ்ச ஊழல்கள் மேலும் மோசமடையும் என்றும் குறிப்பிடத்தக்கது.

நஜிப் கூறும்  உயர்ந்த வருமானம் பெறும் நாடாக மலேசியா மாற்றம்  அடையும்  என்ற பறைசாற்று உண்மை நிலையை காட்டவில்லை என்றும், இது மக்கள், பொருளாதார சூழ்நிலையில்   எதிர் நோக்கும் வாழ்க்கை சவால்களுக்கு எதிரானது.

 

நஜிப் நிர்வாகத்தில் கீழ் பறைசாற்றும் ஆய்வுகள் வெறும் மாயையை ஏற்படுத்தும் நோக்கிலே ஆகும், இது கண்டிப்பாக உண்மையான பொருளாதார சூழ்நிலையையும் மக்களின் சிரமங்களையும் காட்டவில்லை என்றும் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  இந்த  ஆய்வுகள்  எந்தப் பயனும் இல்லை  என்றால் மிகையாகாது.

* சைட்  இப்ராகிம் சைட் நோ

மத்திய தகவல் பிரிவு தலைவர்

மக்கள் நீதி கட்சி
@கெஜிஎஸ்


Pengarang :