NATIONALRENCANA PILIHAN

இசாமுடின் நியமனம் தொடர்ந்து பிரதமராய் இருக்க நஜிப்பின் தந்திரம்

ஷா ஆலாம் – தற்காப்பு அமைச்சரான டத்தோஸ்ரீ இசாமுடினை பிரதமர் துறையின் சிறப்பு செயல்பாடு பொறுப்பாளராக நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நியமனம் செய்திருப்பது அவர் தொடர்ந்து நாட்டின் பிரதமராய் இருப்பதற்கான அரசியல் தந்திரம் என ஜசெக கட்சியின் நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி,நடப்பு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் அமிடி உட்பட டத்தோஸ்ரீ அப்துல் இரஹ்மான் டாஹலான்,டத்தோஸ்ரீ சலே ஷாயிட் கிருவாக் மற்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் ஷ்ப்ரி யாக்கோம் ஆகியோர் மீது நஜிப் நம்பிக்கை இழந்திருப்பதையும் அஃது காட்டுவதாக மேலும் கூறினார்.

நஜிப் தாம் தொடர்ந்து பிரதமராய் இருப்பதற்கும் அவரை நாட்டின் பொது தேர்தல் வாயிலாகவோ அல்லது அம்னோ தேர்தலிலோ தோற்கடித்து விடக்கூடாது என்பதற்கான அச்சாரம் இதுவென்றும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி,இசாமுடின் நஜிப்பின் தலைமைத்துவத்தில் நிழல் துணைப்பிரதமர் என்றும் சொல்லப்படும் நிலையில் நஜிப்பின் கரத்தை வலுப்படுத்த இசாமுடின் முதன்மையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில்,நாட்டின் 14வது பொது தேர்தலுக்கு இசாமுடின் தலைமைதாங்குவார் என்றும் ஆரூடம் கூறிய அவர் புத்ரா ஜெயாவை கைப்பற்றவும் தொடர்ந்து பிரதமராய் வழிவகுக்கவும் நஜிப்பிற்கு இசாமுடின் வலுவானவராய் இருப்பார் என்றும் கிட் சியாங் கூறினார்.

 

 

 

 


Pengarang :