RENCANA PILIHANSELANGOR

உடனடியாக நடவடிக்கை எடுங்கள், தீடிர் வெள்ளம் மீண்டும் வராமல் தடுப்போம்

ஷா ஆலம், 25 ஏப்ரல்:

சம்பந்தப்பட்ட  இலாகாக்கள் சாலை விரிவாக்கும் பணிகளிளால் ஏற்படும் தீடிர் வெள்ளம் கம்போங்  ஈஜோக்கில்  மீண்டும் வராமல் இருக்க முறையான செயல்பாடுகளை ( SOP) பின்பற்ற வேண்டும்.

ஈஜோக் சட்ட மன்ற உறுப்பினர், டாக்டர் இட்ரிஸ் அமாட் கூறுகையில்,  மக்களை தவிர்த்து மாவட்ட நில  அலுவலகம், வடிகால் மற்றும் பாசனத்துறை  இலாகா, பொதுப்பணி இலாகா மற்றும் பொறியியல்துறை இலாகா போன்ற  அனைத்து அரசு  இலாகாக்கள் உடனடியாக  இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

“வடிகால் ஆழமாக்கும் மற்றும்  விரிவாக்கும் பணிகள் தீவிரப் படுத்த வேண்டும். குறுகிய வடிகாலினால்  கோம்பாக் வட்டாரத்தில்  இருந்து வரும்  அதிக நீர் கரை புரண்டு ஓடியது.” என்றார்.

“அப்படி  உடனடி தீர்வு மற்றும் நடவடிக்கைகள்  எடுக்காவிட்டால் மீண்டும் வெள்ளம் வரும் என்றும் இது கிராம மக்களை கஷ்டப்படுத்தும்.” என்றார்

18 ஏப்ரல், அன்று 16 குடும்பங்கள் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்டு, பொருட்சேதங்களும் ஏற்பட்டன.

வீடு பாதிக்கப்பட்டதும் இல்லாமல், செம்பனை தோட்டமும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ளம் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான  இயற்கை பேரிடர் என மக்கள் தெரிவித்தனர்.


Pengarang :