OLYMPUS DIGITAL CAMERA
SELANGOR

எம்பிஎஜே நிபுணர்களை நியமித்து வெள்ள தடுப்பு முறைகளை ஆராயும்

அம்பாங், 26 ஏப்ரல்:

அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் தகுதி பெற்ற குத்தகையாளரை தேர்வு செய்து தனது நிர்வாகத்தில் கீழ்  உள்ள  பகுதியில்  வெள்ளம் வராமல் தடுக்க திட்டங்கள் வரைய பணித்து இருக்கிறது.

அதன் தலைவர், அப்துல் ஹமீத் ஹுசேன் கூறுகையில், இம்முடிவு அண்மையில்  வடிகால் பிரச்சனைகளால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

” எம்பிஎஜே வடிகால் வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டது  ஆனால் நீண்டகாலமாக பயனில் இருக்கும்   பாழடைந்த வடிகாலினால் மீண்டும் முழுமையான, சிறந்த முறையில் வடிகால் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும்  இதற்கு  அதிகமான நிதி ஒதுக்கீடு தேவை என்று தெரிவித்தார்.

ydp-mpaj-abd-hamid-hussain

 

 

 

 

 

 

 

 

 

“இதற்கு  ஆரம்பமாக எம்பிஎஜே, நிபுணர்களை பணியில் அமைத்து வெள்ளம் ஏற்படும் இடங்களில் அதைத் தடுக்க பரிந்துரைகள் வழங்க வேண்டும் என கட்டளை  இடப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.

இதுவரை எம்பிஎஜே நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதியில்  இரண்டு முறை வெள்ளமும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது புக்கிட் தெராத்தாய், பண்டான் இன்டா மற்றும் லெம்பா மாஜு போன்ற இடங்களில் தொடர்ந்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும்  எம்பிஎஜே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மற்றும் நீண்டகால மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தி வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.

இந்த பரிந்துரையில் அம்பாங் வட்டாரத்தில்  உள்ள  மூல  ஆற்றை  அகலமாக்கவும் மற்றும்  ஆழமாக்கவும் முயற்சிகள்  எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இதுவரைஇதுவரையில் எம்பிஎஜே  இப்பணியில் ரிம 27 மில்லியன் செலவு செய்திருக்கிறது என்று கூறினார். மேலும் கூறுகையில், நிதியை செலவு செய்தாலும்  எம்பிஎஜே-விற்கு திட்டத்தை தொடர நிதி பற்றாக்குறை  ஏற்படும் என்று தெரிவித்தார்.

@கெஜிஎஸ்


Pengarang :