PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ (MBSA) ஆறு கனரக வாகனங்களை பறிமுதல் செய்தது

ஷா ஆலம், 28 ஏப்ரல்:

ஆறு கனரக வாகனங்களை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) செச்சன் 25 மற்றும் 19 ஆகிய பகுதிகளில்  கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யும் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றியது.

எம்பிஎஸ்ஏ-வின் பெறுநிறுவன மற்றும் பொது தொடர்புப் பிரிவின் தலைவர் ஷாரின்  அமாட் கூறுகையில், இந்த கூட்டு நடவடிக்கையில் செக்சன் 25-இல்  இரண்டு பேருந்துகள், ஒரு கொண்டேனா மற்றும்  ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து செக்சன் 19-இல்  ஒரு பேருந்து மற்றும்  ஒரு நீண்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது  என தெரிவித்தார்.

 

” கனரக வாகனங்களுக்கு பூங்கா சிறிய சட்டத்தின் கீழ்  ரிம 60 மற்றும் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் ரிம 300 தண்டனை பணமாகவும் விதிக்கப்படும். அப்படி தொடர்ந்து இந்த கனரக வாகனங்களை அப்புறப்படுத்த விட்டால் கூடுதல் கட்டணமாக ரிம 2000 விதிக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

IMG_0457

 


Pengarang :