NATIONALRENCANA PILIHAN

ஏப்ரல் 24 கட்டாயம் விடுமுறை கொடுக்க வேண்டும்

புத்ரா ஜெயா – நாட்டின் மாமன்னர் அரியனை ஏறும் அதிகாரப்பூர்வ நிகழ்வு வரும் ஏப்ரல் 24இல் நடைபெறவிருக்கும் நிலையில் அன்றைய தினம் மலேசியாவில் அனைவருக்கும் பொது விடுமுறையாகவும்.ஒவ்வொரு முதலாளியும் தங்களின் தொழிலாளர்களுக்கு கட்டாயம் விடுமுறை கொடுக்க வேண்டும் என மனிதவள அமைச்சு டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியோட் ஜாய்ம் தெரிவித்தார்.

மாமன்னர் அரியணை ஏறும் நிகழ்வு நாட்டின் அதிகாரப்பூர்வ நிகழ்வு என்பதால் நாட்டின் தொழிலியல் சட்டம் 1955இன் கீழும் அந்த நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

அதேவேளையில்,தொழிலியல் சட்டம் 1955 செக்ஷன் 60D (1A) அடிப்படையில் இந்த பொது விடுமுறையை முதலாளிகள் வேறு நாட்களுக்கும் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறிய அவர் இந்த விடுமுறையை ஏப்ரல் 24 எடுத்துக் கொள்கிறார்களா அல்லது வேறு நாட்களில் எடுத்துக் கொள்கிறார்களா என்பதை முதலாளிகள் தங்களை சார்ந்த தொழிலாளர்களிடன் முதலில் அனுமதி கோர வேண்டும் என்பதையும் அவர் பெர்னாமிற்கு அளித்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில்,ஏப்ரல் 24 பெர்லிஸ்,கெடா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கு இஸ்ராக் – மிக்ராஃஜ் மாநில பொது விடுமுறை என்பதால் அம்மூன்று மாநிலங்களும் ஏப்ரல் 25இல் பொது விடுமுறையை எடுத்துக் கொள்ளும் என்றும் அறிவித்தார்.

 

 

 


Pengarang :