NATIONALRENCANA PILIHAN

கட்டொழுங்கும் ஒற்றுமையும் புத்ரா ஜெயாவை கைப்பற்ற பெரும் பங்காற்றும்

சிராம்பான் – நாட்டின் 14வது பொது தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியிடமிருந்து புத்ரா ஜெயாவை கைப்பற்ற கெஅடிலான் கட்சியினர் மற்றும் பாக்காதான் ஹராப்பான் கூட்டணியின் மத்தியில் கட்டொழுங்கும் ஒற்றுமையும் அதேவேளையில் புரிந்துணர்வும் மேலோங்க வேண்டும் என கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

புத்ரா ஜெயாவை கைப்பற்றும் எண்ணத்தை நாம் கொண்டிருக்கும் போதும் அதனை நினைவாக்குவதற்காக நாம் பல்வேறு ஆக்கப்பூர்வ யுக்திகளையும் செயல்பாடுகளையும் விவேகமாய் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதில் கட்டொழுங்கும் ஒற்றுமையும் பெரும் பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.

வெற்றியை நாம் இலக்காக கொண்டிருக்கும் போது அதனை செயல்படுத்துவதற்கு நாம் இதனை அமல்படுத்த வேண்டியது அவசியமாவதாகவும் கூறிய சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான அவர் சுயகட்டொழுங்கும் ஒற்றுமையும் நாட்டின் 14வது பொது தேர்தலில் நமது வெற்றியை உறுதி செய்யும் என்றும் நினைவுறுத்தினார்.

 

 

KEADILANK

Beliau seterusn         கட்சியிலும் கூட்டணியிலும் நம்மிடையே சிறு சிறு சிக்கல்களும் கருத்துவேறுபாடுகளும் இருந்தாலும் அவை யாவும் நமது விவேகமான செயல்முறையாலும் சிந்தனையாளும் நன் நிலையில் தீர்க்கப்படுவதாகவும் கூறினார்.இந்நிலையில்,இதனை ஒரு காரணியமாய் நாம் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருக்க கூடாது.தலைவர்கள் மத்தியில் மட்டுமின்றி அடிமட்ட கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் சுயகட்டொழுங்கும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில் கெஅடிலான் இன்றைய சூழலில் நாட்டில் மாபெரும் அரசியல் ஆளுமையாய் உயிர்ப்பித்திருக்கும் சூழலை உருவாக்கியவர்கள் கட்சியின் முதன்மை தலைவர்களான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசீஸா ஆகியோர்தான் என்றும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி நினைவுக்கூர்ந்தார்.

நமது ஆளுமையும் மக்கள் நம் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையும் தான் இன்று அம்னோ தேசிய முன்னணியின் அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி பெருமிதமாய் கூறினார்.

ஹராப்பான் கூட்டணில் சில கருத்துவேறுபாடுகள் உலா வந்தாலும் அதனை நமது ஒற்றுமையும் விவேகமான புரிந்துணர்வும் ஓரங்கட்டி விடுவதோடு நம்மிடையே வலுப்பெற்று வரும் ஒற்றுமை நாட்டின் 14வது பொது தேர்தலில் புத்ரா ஜெயாவையை நாம் கைப்பற்ற பெரும் பங்காற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 


Pengarang :