SELANGOR

காமுடா லேன்ட் மீண்டும் வெள்ளம் வராமல் தடுக்க ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது

ரவாங், 23 ஏப்ரல்:

காமுடா லேண்ட் நிறுவனம் கம்போங் சுங்கை செராய் பகுதியில் மீண்டும் வெள்ளம் வராமல் தடுக்க எந்த முயற்சிக்கும்   ஒத்துழைப்பு தர தயாராக  இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஊடக  அறிக்கை வாயிலாக  இந்த நிறுவனத்தின் பேச்சாளர் கூறுகையில், தங்களது நிறுவனம் இடத்தை கட்டிட மேம்பாட்டு பணிகளின் போத  எல்லா வழிகாட்டிகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி இருப்பதாகவும் கூறினார்.

மேலும் கூறுகையில், மண் அரிப்பு மற்றும் சேற்று ஒழுங்குமுறை நடவடிக்கை செயல்பாடுகளையும் பின்பற்றி வெள்ள நீர் தேக்கி, தடுப்பு அணை, “சிலிட் ஃபன்செஸ்” மற்றும் மண்  அரிப்பு தடுப்பு ஆகியவற்றை நிறுவியதாகவும் தெரிவித்துள்ளது.

” வெள்ளச் சிக்கல்  அப்பகுதியில் பல  ஆண்டுகளாக தொடர்ந்து  ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி  அரசாங்கத்திற்கு புதிய வடிகால்  அமைக்கும் திட்டம் இருந்தால் மேம்பாட்டு நிறுவனங்கள் குறிப்பாக காமுடா கண்டிப்பாக முழுமையான  ஒத்துழைப்பை வழங்கும்.” என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு நடந்த வெள்ளம் காமுடா நிறுவனத்தின் மேம்பாட்டு திட்டங்களால் ஏற்பட்டது  என பொது மக்கள் குற்றம் சாட்டினர்

GAMUDA

 

 

 

 

 

மேலும் மக்கள்,  ஏற்பட்ட வெள்ளத்திற்கு காமுடா முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

மேற்கண்ட நெருக்குதலுக்கு பதில் அளிக்கும் போது, வெள்ளம் ஏற்பட முக்கிய காரணம் செராய்  ஆறு பெய்த தொடர் கன மழையால் நிறைந்து வழிந்ததே ஆகும் என்று விளக்கம் தரப்பட்டது.

 

=EZY=


Pengarang :