MEDIA STATEMENT

கெடா நீர் : பொய்யான வாக்குறுதிகள் , மந்திரி பெசார் மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த தோல்வி

டத்தோ ஜோஹாரி அப்துல்
டத்தோ ஸ்ரீ அகமட் பாஷ்சா முகமட் ஹானிபா தலைமையிலான கெடா மாநில அரசாங்கம் குடிநீர் பிரச்சனையை களைவதில் தோல்வி அடைந்தார். இதற்கு முன் மக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் மாநில மந்திரி பெசார் டாருல் அமான் நீர் நிறுவனம் (சாடா) ஜாபியில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவம்பர் மாதத்தில் நிர்மாணிக்கும்  அறிவிப்பு மாநில சட்டசபையில்  எழுத்துப் பூர்வமாக இருந்தால் மட்டுமே  ஏற்றுக்கொள்ள முடியும்.
கெடா மாநில மக்கள் நீர் பற்றாக்குறையினால் மிகவும் நம்பிக்கை  இழந்து வருகிறார்கள்.
 மேலும் 2016-இல் இருந்து டியுப் கிணறு அமைக்கபட்டதின் விவரங்கள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநில மக்களின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்புள்ள அரசாகவும் இருக்க வேண்டும். அதே வேளையில் இதற்கு மாற்றுத் திட்டங்கள் கொண்டு வந்து மாநில அரசாங்கம் தீர்வு காணவேண்டும்.
நீண்டகால திட்டதிற்கு, மாநில அரசாங்கம்  (சாடா) மற்றும் நீர், இயற்கை வள  அமைச்சு மூலம் கெடா மாநிலத்திற்கு முறையான    நீர் மேம்பாட்டுத்திட்டத்தை வரைய வேண்டும்.  மேற்கண்ட திட்டத்தை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
அது மட்டுமல்ல, சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு அரசு சார்பற்ற  இயக்கங்கள், பொது மக்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் நீர் வள  ஆய்வாளர்கள் மூலம் கேட்டறிந்து  இதற்கு தீர்வு காண வேண்டும்.
# டத்தோ ஜோஹாரி அப்துல்
சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர்

Pengarang :