MEDIA STATEMENT

சரவாக் கடற்பகுதியில் சீனா அத்துமீறல், புத்ராஜெயா நடவடிக்கை எடுக்க வேண்டும்

சீன கரையோர பாதுகாப்புப் படையினர் சரவாக் கடற்பகுதியில், மலேசிய உரிமை கொண்டாடும் பகுதியில்  அத்துமீறி நுழைந்துள்ளதாக  செய்தி வந்துள்ளது.

அந்த செய்தியின் படி, கடற்படையினர் கடந்த  ஆண்டு இறுதியில்  இருந்து ரோந்துப் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

2015-இல் மலேசியா தன் பிரத்தியேக பொருளாதார பகுதியில் சீனக் கப்பல்  நுழைந்துள்ளதாக தூதரக ஆட்சேபனை செய்தது.

2015-இல்  செய்த ஆட்சேபனைக்கு பிறகு 11 சீனப் படை கப்பல்கள் மலேசிய கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருப்பது ஒருவகையில் நமது  ஆட்சேபனையை கொஞ்சமும் மதிக்கவில்லை என்றே அர்த்தம்.

இச்சம்பவம் நாட்டின் இறையாண்மைக்கு ஒரு சவாலாக உள்ளது மற்றும் புத்ராஜெயா, சீனப் படை கப்பல்கள் வருவதை  ஆட்சேபித்து மிக  கடுமையான செயல்பாடுகள் குறித்து தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

அப்படி நாம் தொடர்ந்து மௌனமாக இருந்தால் நாம் சீன நாட்டின் அத்துமீறலுக்கு அடிபணிந்தாகவே அர்த்தம்?

அவர்களின் கடற்பகுதியில் வருகை அதோடு மட்டுமில்லாமல், நம் நாட்டின் பிரதமர் நஜிப் நிர்வாகத்தில் கீழ்  1MDB போன்ற ஊழல் மோசடிகள் மேலும் அன்னிய சக்திகளின் தலையீடு அதிகரிப்பு ஏற்படும் என்றும் குறிப்பாக இது அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவை இதில் அடங்கும்.

சீன நாடு நமது பொருளாதார நடவடிக்கைகளை சீர் செய்யும் என  அளவுக்கு அதிகமாக நம்பியிருக்கும் செயல் குறிப்பாக பல கோடிகள் ஊழல் மோசடிகள் நடந்த பிறகு தூதரக நிலைபாடு  உறுதியாக  இருக்க வாய்ப்பில்லை.

புத்ராஜெயா தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டை  இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை என்றால் நஜிப் நிர்வாகத்தில் கீழ் நாட்டின் இறையாண்மையை காக்க முடியாது, இது மேலும்  அந்நிய நாடுகளின் தலையீடு அதிகரிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

*நிக் ரஷ்மி நிக் அமாட்

இளைஞர் பகுதி தலைவர்

மக்கள் நீதி கட்சி


Pengarang :