NATIONAL

சளிக்காய்ச்சல் : ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள்

ஷா ஆலம் 25 ஏப்ரல்:

மிக எளிதாக சளிக்காய்ச்சல் கிருமிகளால் தாக்கப்படும் நபர்கள்  ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசியை  பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சுங்கை பூலோ  மருத்துவமனையின்  ஆலோசக நிபுணரும் இலாகாவின் தலைவருமான டத்தோ டாக்டர் கிறிஸ்டோபர் லீ கூறுகையில், சளிக்காய்ச்சல் நோய் மிக கொடுமையான நோயாகி மரணம் விளைவிக்கும்.

மிக அதிகமாக 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்கள் பாதிக்கப்படுவதாகவும், மேலும் 5 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறார்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், இனிப்பு நீர் மற்றும்  ஆஸ்மா பாதிப்புள்ளவர்களும் சளிக்காய்ச்சல் கிருமிகளால் தாக்கப்படும் நபர்கள்  ஆவார்.

“மேற்கண்டவர்கள் ஆண்டுதோறும் தடுப்பூசி பெற்று தங்களின்  ஆரோக்கியத்தையும் உயிரையும் பாதுகாக்க முடியும். ” என்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

கடந்த 12 ஏப்ரல்-இல் கருவுற்ற பெண்களின் ஒருவர் H1N1 கிருமியால் பாதிக்கப்பட்டு கோலா திரெங்கானு சுல்தானா நூர் ஸாஹிரா மருத்துவமனையில் இறந்தார்.

h1n1_influenza_061215

 

 

 

 

 

 

இதனிடையே, 7 சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கிறிஸ்டோபர் கூறுகையில், இச் சளிக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆனது தொடர் இருமல், தொண்டை வலி, மற்றும் சளிக்காய்ச்சல் ஏற்படும் என்று தெரிவித்தார்

மேலும் கூறுகையில், இது நிமோனியா அல்லது நுரையீரல் பாதிப்புக்கும் வித்திட்டது மரணம் விளைவிக்கும் என்றார்.

 


Pengarang :