NATIONALRENCANA PILIHAN

சிறப்பு செயல்பாடுகளின் பொறுப்பாளராய் டத்தோஸ்ரீ இஸாமுடின் நியமனம் – அரசியல் மாற்றங்களுக்கான அறிக்குறி

ஷா ஆலாம் – நாட்டின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸாமுடின் உசேன்னை பிரதமர் துறையின் சிறப்பு செயல்பாடுகளின் பொறுப்பாளராக பிரதமர் நஜிப் துன் ரசாக் நியமனம் செய்திருப்பது நாட்டில் அரசியல் நிலையிலான மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கெஅடிலான் கட்சியின் பொது செயலாளர் டத்தோ சைப்புடின் நஷாரூடின் தெரிவித்தார்.

இதே சூழல் கடந்த 1997இல்  அப்போதைய துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்யை வீழ்த்துவதற்கு முன்னால் பிரதமர் துன் மகாதீர் துன் டாய்ம் சைனுடினை அமைச்சரவையில் சிறப்பு செயல்பாடுகளின் பொறுப்பாளராய்  நியமித்ததையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.

அன்றைய சூழலில் துன் டாய்ம் அமைச்சரவையில் எதுவுமில்லை.ஆனால்,இஸாமுடின் தற்போது நாட்டின் தற்காப்பு அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் சுட்டிக்காண்பித்த அவர் நாட்டில் ஏதோ ஒரு அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான அறிக்குறியாய் இஃது அமைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இஸாமுடினை நஜிப் பிரதமர் துறையில் சிறப்பு செயல்பாடுகளின் பொறுப்பாளராய் அறிவித்தது தனக்கு கடந்த 1997ஆம் ஆண்டின் அரசியல் சூழலை நினைவுப்படுத்துவதாக கூறினார்.

 

இருப்பினும் அன்று அன்வாருக்கு நிகழ்ந்ததை போல நஜிப்பின் தலைமைத்துவத்தில் அரசியல் பலியாகப் போவது யார் என்பதை டத்தோ சைப்புடின் நஷாரூடின் கருத்துரைக்கவில்லை.ஆனால்,இந்த புதிய நியமனம் நாட்டின் துணைப்பிரதமரின் அரசியல் செயல்பாடு கேள்விக்குறியாகலாம் எனும் கருத்தையும் மறுப்பதற்கில்லை.

இன்று மதியம் பிரதமர் நஜிப் தற்காப்பு அமைச்சரான இஸாமுடினின் இந்த கூடுதல் பொறுப்பு குறித்து அறிவித்தார்.

 

 


Pengarang :