RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் திவாலாகி விட்டது என்ற கூற்றை இலவச குடிநீர் திட்டம் பொய்யாக்கியது

கோலா சிலாங்கூர், 21 ஏப்ரல்:

9 ஆண்டுகால   இலவச குடிநீர் திட்டத்தினால் சிலாங்கூர் மாநிலம் திவாலாகி விடும் என்ற மத்திய அரசாங்கத்தின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகிவிட்டது எனவும்  இத்திட்டம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது  என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் வேளாண்மை தொழில் நிரந்தர குழுவின்  ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறுகையில், இத்திட்டத்தின் வெற்றி சிலாங்கூரை மக்கள் நலன் காக்கும்  மாநிலம் என்ற கூற்றை பிரதிபலிக்கிறது.

 

Zaidy Abdul Talib (1)

 

 

 

 

 

” அம்னோ தேசிய முன்னணி ஆளும் பொது வெறும் ரிமா 400 மில்லியன் மட்டுமே கஜானாவில்  இருந்ததாகவும் ஆனால்  இன்று  இந்த  எண்ணிக்கை ரிம 3.5 பில்லியனை எட்டியது இமாலய சாதனை  ஆகும். இலவச குடிநீர் திட்டதிற்கு  மாநில அரசாங்கம் ரிம 170 பில்லியனை வருடத்திற்கு செலவிடுகிறது எனவும்  அவை மாநில அரசாங்கத்தின் மக்களின் மீது அக்கறை கொண்ட திட்டங்கள்  ஆகும். ” என்று விவசாயிகளின் தொகுதி தலைவர்களுக்கான சான்றிதழ்களை எடுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறினார்.

2008 – இருந்து 2015 வரையில் மாநில அரசாங்கம் ரிம 1.1 பில்லியனை இலவச குடிநீர் திட்டதிற்கு செலவு செய்திருக்கிறது.

@கெஜிஎஸ்


Pengarang :