ANTARABANGSA

சிலி நாட்டை 7.1 அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது

சாந்தியாகவோ, 25 ஏப்ரல்:

7.1 மெக்னிதுட் அளவிலான நிலநடுக்கம் நேற்று  சிலியின் மேற்குக் கரையை தாக்கியது. இதன் தாக்கம் அதன் தலைநகரத்தை அதிர வைத்ததோடு இரண்டு முறை தொடர்ந்து உலுக்கியது.

அனைத்துலக செய்தி ஊடக நிறுவனமான ரியூட்டர்ஸ் தெரிவிக்கையில், இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்று சிலி நாட்டின் அவசரச் சேவை பிரிவு கூறியதாக பதிவு செய்யப்பட்டது. மேலும் சிலியின் கடற்படை மற்றும் பசிபிக்  சுனாமி எச்சரிக்கை மையமும் இந்நிலநடுக்கத்தினால் சுனாமி வர வாய்ப்பில்லை என்று கூறுகிறது.

வல்பராஸ்ஸோ நகரத்தில் மேற்குபகுதியில் 35 கிலோமீட்டர் தொலைவில் மையமிட்டதாகவும் கடல் பரப்பில் கீழ் 10 கிலோமீட்டர் ஆழத்தில்  அதிர்வு  ஏற்பட்டதாக அமெரிக்காவின் நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிலி நாட்டின் அதிகாரிகள் இதற்கு முன்பாக வல்பராஸ்ஸோ நகரத்தில் கடற் பகுதியில் வசிக்கும் மக்களை 97 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாந்தியாகோவிற்கு மாறிச் செல்லுமாறு ஆணையிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இது சுனாமியை எதிர் நோக்கும் நடவடிக்கை எனவும் பின்பு இந்த  ஆணையை திரும்பப் பெற்றது.

இரண்டு முறை  அதர்வுகள் முறையாக 5.0 மற்றும் 5.4 அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்படதாகவும் இஃது சாந்தியாகோ நகரில் உணர்ந்தாகவும் கூறப்படுகிறது.

 

=EZY=


Pengarang :