SELANGOR

செலாயாங் நகராண்மை கழகம் சட்ட விரோத வாகன பழுது பார்க்கும் கடைகளை அகற்றியது

ஷா ஆலம்,25 ஏப்ரல்:

பொது மக்கள் புகாரின் அடிப்படையில் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) காலியான இடத்தில் அமைந்திருந்த சட்ட விரோத வாகன பழுது பார்க்கும் கடையை உடைத்தது.

எம்பிஎஸ்-இன் பொது உறவு அதிகாரி, அமாட் பௌஃஸி இசாக் கூறுகையில், வடிகால் மற்றும் கட்டிட சிறிய சட்டத்தின் கீழ் செக்சன் 3-இன் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

“இதனை நிர்வகித்து வந்தவர் ஏற்கனவே இடத்தை காலி செய்து விட்டதாகவும், எம்பிஎஸ் கடந்த 20 ஏப்ரல் தேதியன்று உடைத்தது” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

“இதற்கு முன்பு இந்த இடம் பேட்மிண்டன் மற்றும் தாக்ரோ விளையாட்டு மைதானமாக இருந்ததாக என்றும் வாகன பழுது பார்க்கும் கடை தொடங்கியது முதல் மக்களின் இயல்பான வாழ்க்கையை பாதித்தது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வாகன பழுது பார்க்கும் கடை சிறிது சிறிதாக பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்த போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.


Pengarang :