PBTSELANGOR

டேவான் ஹம்ஸாவை மேம்படுத்தும் பணிகள் ஜுன் 2017-இல் முடிவடையும்

கிள்ளான், 26 ஏப்ரல்:

கிள்ளான் நகராண்மை கழகத்தின் கீழ் உள்ள டேவான் ஹம்ஸாவின் மேம்படுத்தும் பணிகள்  இவ்வருட ஜுன் மாதத்தில் முழுமைப்படுத்த பெறும்.

நகராண்மை கழக துணைத்   தலைவர், அடி பைஃசால் அமாட் தர்மிஸி கூறுகையில், இதுவரையில் ரிம 4.8 மில்லியன் செலவு செய்யப் பட்டதாகவும் 80% வேலைகள் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

” கிள்ளான் வட்டாரத்தில் மண்டபம் பயன்பாட்டிற்கு  தேவைகள் அதிகரித்து வருவதாகவும் தங்கும் விடுதிகளில் வாடகை  அதிகமாக இருப்பதால்  இந்த மண்டபத்தை விரிவாக்கம் செய்துள்ளோம். நோன்பு பெருநாளுக்குள் வேலைகள் முடிந்துவிடும். ” என்று உறுதியாக கூறினார்.

இந்த செய்தியை நகராண்மை கழகத்தின் முழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

டேவான் ஹம்ஸா மறுசீரமைப்புப் பணிகளில் பழுதூக்கி மற்றும் தங்கும் விடுதியில்  இருக்கும் உபகரணங்கள்  போன்றவை அடங்கும் என்றார். மண்டபத்தின்  வாடகையை பற்றி பேசும் போது தங்கும் விடுதியை விட மிகக் குறைவாகவும் நியாயமாகவும் இருக்கும்  என்று தெரிவித்தார்.

@கெஜிஎஸ்


Pengarang :