NATIONAL

தலைநகரில் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர் – தொடர்ந்து இடைவிடாமல் சுமார் நான்கு மணி நேரம் பெய்த கனத்த மழையால் கோலாலம்பூரில் பெரும் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.இதனால் தலைநகரின் பெரும் பகுதி சாலை நெரிசலால் ஸ்தம்பித்ததாகவும் தீயணைப்பு மீட்புப்பணி தலைமை செயல்முறை அதிகாரி சம்சூல் சைபானி மாஃரிப் தெரிவித்தார்.

தலைநகரின் ஜாலான் செந்துல்,பத்து மூடா தம்பாஹான்,பெர்சியாரான் அம்பாங் ஹீலிர் ஆகிய பகுதிகளில் நீர் தேங்கி இருந்ததோடு எம்.ஆர்.ஆர் 2 உட்பட தேசிய மிருககாட்சிசாலை செல்லும் இருவழி பாதையிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு 0.6 மீட்டருக்கு நீர் உயர்ந்திருந்தது என்றும் கூறினார்.

தலைநகரின் பெரும் பகுதி திடீர் வெள்ளத்தால் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்திய நிலையில் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.சிலர் வெள்ளத்தால் தங்களின் வாகனங்கள் மூழ்கிடக்கூடாது என்பதில் பெரும் முயற்சியினை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் வெளிமண்டல திணைக்களத்தின் புள்ளியல் விவரம்படி தலைநகர் மட்டுமின்றி நேற்றைய கனத்த மழை கெடா,பேராக்,சிலாங்கூர்,கூட்டரசு பிரதேசம்,நெகிரி செம்பிலான்,ஜோகூர்,பகாங்,திரெங்காணு மற்றும் சரவாக்கிலும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 


Pengarang :