ANTARABANGSANATIONAL

துருக்கி நாட்டின் வெற்றி ஒரு முன்மாதிரி

ஷா ஆலம் 18 ஏப்ரல்: மலேசிய நாடாளுமன்ற  எதிர்க்கட்சி மற்றும் மக்கள் நீதி கட்சி (கெஅடிலான்) துருக்கி நாட்டின் மக்களுக்கு ஜனநாயக நடைமுறையை செம்மையாக பொது வாக்கெடுப்பில் நிறைவேற்றியதிற்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர், டத்தோ ஸ்ரீ வான்  அஸிஸா கூறுகையில் துருக்கி மக்கள் மற்றும்  அதிபர் ரிகெப் தாயிப் எர்டோகன் அவர்களுக்கும் விவேகமான, வழிகாட்டி மற்றும் பொறுமையும் இந்த முடிவில் வெற்றி பெற்றதற்கு  இறைவனை வேண்டுகிறேன்.

துருக்கி தொடர்ந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதே வேளையில் ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வியல் மேம்பாடு போன்ற அனைத்திலும் சிம்ம சொப்பனமாக விளங்கும் என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஏகே கட்சி பெற்ற அங்கீகாரத்தை துருக்கி நாட்டின்  ஜனநாயக மறுமலர்ச்சிக்கு வித்திட வேண்டும். அனைத்துலக சமுதாயம் தொடர்ந்து பாலஸ்தீனம், எகிப்து, பங்களாதேஷ் மற்றும் மலேசியாவில் ஜனநாயகம் மேலோங்க வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு, எர்டோகன் நாட்டில் நடந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி கண்டார். அதிபர் பதவிக்கு  மேலும் அதிகாரமும் மற்றும் பிரதமர் பதவியை அகற்றுவது போன்றவை இந்த வாக்கெடுப்பில் நிறைவேற்றியது.

 

 

Refe
=EZY=


Pengarang :