SELANGOR

தென் தைவான் விஞ்ஞான பூங்காவின் வெற்றியை சிலாங்கூர் ஆராயும்

தைனான், தைவான் 26 ஏப்ரல்:
 இன்று காலை  சிலாங்கூரின் பிரதிநிதிகள் தொடர்ந்து தென் தைவான் விஞ்ஞானபூங்காவிற்கு வருகை புரிந்தனர்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், தைனான் மேயரின் அழைப்பை ஏற்றும் செப்பாங் சைபர் வேலியை மேம்படுத்தவும் இந்த வருகை  உதவும் என்றார்.
” இந்த விஞ்ஞான பூங்காவின் செயல்பாடுகள் சிலாங்கூரை பெரிதும் கவர்ந்தது என்றும் இதை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களுக்கு புதிய  வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்,” என்றார் அவர்.
MB-taiwan01
” மூன்று பிரிவினரை, முறையே கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள் மற்றும்  அரசாங்கம் பயன்படுத்தி விஞ்ஞான பூங்காவை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
“ஆகவே , மாநில அரசாங்கம் இந்த விஞ்ஞான பூங்காவின் வெற்றியை கருத்தில் கொண்டு செப்பாங் சைபர் வேலியை மேம்படுத்தவும்  அவர்களின் கரிம விவசாயம் மற்றும் பசுமை தொழில் நுட்பத்தையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்,” என்றார்.
STSP
 இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநிலம், சிலாங்கூர் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக சிலாங்கூர் சைபர் வேலியை, செப்பாங் நகரத்தில்  அமைக்க  இருந்தது.  இந்தத் திட்டம்    ஒரு விவேக, பசுமை மற்றும் நிலைத்தன்மை போன்றவை அடிப்படையில் ரிம 16.9 பில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரோடு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களான தெங் சாங் கிம், அமிருடின் ஷாரி, டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹய்ரி, மாநில துணை செயலாளர் டத்தோ நோர்  அஸ்மி டிரோன், இன்வெஸ்ட் சிலாங்கூரின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹாசான், சிட்தேக் தலைமை செயல் அதிகாரி வோங் கை பெங், சென்றல் ஸ்பெக்டரமின் தலைமை செயல் அதிகாரி மாமுட் அபாஸ், ஹாலால் மற்றும்  இ-வணிகத்தை சேர்ந்த தொழில் முனைவர்களும் கலந்து கொண்டனர்.
1123

Pengarang :