NATIONALRENCANA PILIHAN

தேர்தல் ஆணையம் கூடுதல் வாக்காளர் பட்டியல் விநியோகத் தடையை நீக்க வேண்டும்

புத்ரா ஜெயா, 28 ஏப்ரல்:

மலேசிய தேர்தல் ஆணையம், நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட   கூடுதல் வாக்காளர் பட்டியல் விநியோகத் தடையை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தச் செயலுக்கு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது.

அமானா கட்சியின்  இளைஞர் பிரிவு தேர்தல் இயக்குனர், முகமட் தகியூடின் சீ மாட் கூறுகையில், இந்த  தடைஉத்தரவு அரசியல் கட்சிகளின்   புத்தகம் மற்றும் குறுந்தகடு ஆகியவை பயன்படுத்தி  ஆய்வு செய்ய முடியாமல் தடுக்கும்.

தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எல்லா மாநில  இயக்குனர்களையும் இந்த கூடுதல் வாக்காளர் பட்டியலை விநியோகம் செய்யக்கூடாது என்று கடந்த 18 ஏப்ரல்  ஆணையிட்டார்.

” அமானாவின் இளைஞர் பிரிவு இந்த முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

IMG_20170428_110344

 

 

 

 

 

 

 

அவர், தேர்தல் ஆணையத்தின் தொடர்பு அதிகாரி முகமட் சப்ரி  அப்துல்லாவிடம் கண்டனக் கடிதம் வழங்கிய பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

 

இந்த தடைஉத்தரவு அரசியல் கட்சிகளின் முன்  ஏற்பாடுகள் தடைபடும் என்றும் குறிப்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது  என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமானா இளைஞர் பிரிவு பாக்காத்தான் ஹாராப்பான் இளைஞர் பிரிவு அனைவரையும் ஒன்றிணைந்து தேர்தல் ஆணையத்தை சரியான விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்

 


Pengarang :