ANTARABANGSAECONOMY

தைவான் நாட்டைப் பற்றி 12 முக்கிய தகவல்கள்

1. தைவானின் பொருளாதாரம் ஆசியாவிலே 5-வது பெரியது, மக்கள் தொகை 23.5 மில்லியன் ஆகும்.

2. உலக பொருளாதார மன்ற அனைத்துலக திறன்மிக்க நாடுகளின் பட்டியலில் 15-வது இடம் மற்றும் கொள்முதல் சக்தி கொண்ட நாடுகளில் 22-வது இடம்.

3. 5 விஞ்ஞான & தொழில்துறை பூங்கா:
மத்திய தைவான் விஞ்ஞான பூங்கா, ஷின்ஜு விஞ்ஞான பூங்கா, கௌசியுங் விஞ்ஞான பூங்கா, நன்காங் மென்பொருள் பூங்கா, நேய்வு விஞ்ஞான பூங்கா மற்றும் தைனான் விஞ்ஞான பூங்கா.

4. மலேசியாவிற்கும் தைவானுக்கும் இடையிலான தூதரக உறவு 1960-இல் ஆரம்பித்தது. தைவானின் தூதரக அலுவலகத்தை 1964-இல் கோலாலம்பூரில் திறந்த பிறகு 1969-இல் அதன் தரம் கொன்சுலாட் ஜெனரல் நிலைக்கு மாற்றப்பட்டது.

5. தைவான் சுங்கத்துறை அறிக்கையின் அடிப்படையில் இரு வழி வர்த்தக ரீதியாக 2015 $13.68 பில்லியன் பரிவர்த்தம் செய்யப் பட்டது. அதில் தைவானின் ஏற்றுமதி $7.13 பில்லியன் என்றும் இறக்குமதி $6.54 பில்லியன் என்று தெரிகிறது.

6. ” இருமுறை வரி தவிர்ப்பது மற்றும் பிசிக்கல் வரி நீக்கப்படுவது போன்ற ஒப்பந்தம் 23 ஜூலை 1996-இல் கையெழுத்தாகியது.

7. மலேசியா-தைவான் பொருளாதார கருத்தரங்கம் 2000 ஆண்டில் இருந்து வருடம் தோறும் நடக்கிறது

8. 2015-இல் தைவான் நிறுவனங்கள் ரிம 1.2 பில்லியனை சிலாங்கூரில் முதலீடு செய்தது.

9. போர்த்துகீசியர்கள் 16ம் நூற்றாண்டில் தைவான் தீவை கண்டு பிடித்து இலா போஃர்மோசா என பெயரிட்டனர். இன்றும் தைவானை போஃர்மோசா என்றே நடைமுறையில் அழைக்கிறார்கள்.

10. தைப்பேய் 101 அல்லது தைப்பேய் நிதி நிர்வாக மையம் உலகில் 2வது மையமாக இருந்து வருகிறது.

11. தைவான் 10 நாடுகளில் 2015-இன் சிறந்த வருகைப் புரியும் நாடாக “லோன்லி பிலேனட்” அறிவித்துள்ளது. இது ஹொங்கோங், சோல் மற்றும் தோக்யோவை விட மலிவானது.

12. குங்பூ கலை மற்றும் தேக்வாண்டோ அதிகம் கற்றுக் கொடுக்க படுகிறது.


Pengarang :