NATIONALRENCANA PILIHAN

நோ ஓமார் தனது அமைச்சை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி வருகிறார்

ஷா ஆலம், 20 ஏப்ரல்:

மத்திய  அரசாங்கம் தங்களின்  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேசிய முன்னணி தோல்வி அடைந்த நாடாளுமன்ற தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட    மேம்பாட்டுத் திட்டங்களை ரத்துசெய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாக்காத்தான் ஹாராப்பான் தனது  கூட்டறிக்கையில், இந்த நடவடிக்கையானது பொதுத் தேர்தலையொட்டி நடைபெறும் பொழுது சூழ்நிலையை மேலும் மோசமடையச் செய்யும்.

இது பல்வேறு  வரிகளையும் குறிப்பாக ஜிஎஸ்டி வரிக்  கட்டும் மக்களின் உரிமைகளை பறிப்பதாகவும் தங்களின்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

 

“எதிர்க்ககட்சிகள் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாளுமன்ற தொகுதிகளில் வாழும் மக்கள் மலேசியர் இல்லையா?. மேற்கண்ட நடவடிக்கைகள்  அதிகார துஷ்பிரயோகம் என்றும்  இது அம்னோ பிஎன்னுக்கு பின்னடைவை  ஏற்படுத்தும். தொடர்ந்து டான் ஸ்ரீ நோ ஒமார் தனது நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும்  உள்ளாட்சி அமைச்சை குதிரை சவாரி செய்வது தன்னுடைய  அரசியல் வாழ்க்கையை தொடரவே ஆகும். ”

இந்த  அறிக்கையை டாக்டர்  இட்ரிஸ் அமாட்  (கெஅடிலான்) டத்தோ அரிஃப் பத்ரி  (டிஏபி) மற்றும் காலிட் சாமாட்  ( அமானா) ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

 

Noh-omar-projek-udang

 

 

 

 

 

“நாங்கள் கூட்டாக நோ ஒமாரை, அந்த கட்டளையை மீட்டுக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட  எல்லா  எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் நீதி மன்ற நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்தனர்.

 

-AA-


Pengarang :