NATIONAL

பாக்காத்தான் புத்ரா ஜெயாவை வென்றால் ஜிஎஸ்டி வரி நீக்கப்படும்

ஷா ஆலம், 24 ஏப்ரல்:

பொருட்கள் சேவை வரி வசூல் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜெயாவை வென்றால் உடனடியாக நீக்கப்படும்  என்று  கெஅடிலான் கட்சி யின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வர் கூறினார்.

இந்நடவடிக்கை பாக்காத்தான் நிர்வாகத்தின் மக்கள் நல நோக்கமாக இருக்க வேண்டும் என்றும்  இவ்வரியினால் நாட்டு மக்கள் பெரும் சுமைகளை எதிர் நோக்கி வருகிறார்கள்.

“இந்த மோசமான  வரியினால் மக்கள் அதிகமான துன்பங்களையே அனுபவிக்கிறார்கள் என்று  எங்களுக்கு புரிகிறது. ஆக, இந்த வரி வசூல் தொடரக் கூடாது  ஏனெனில் மக்களின் பொது நலத்தை இது பெரிதும் பாதிக்கிறது. ” என்று உறுதியாக கூறினார்

ஜிஎஸ்டி வரி கடந்த 1 ஏப்ரல் 2015 இருந்து 6% வீதமாக வசூல் செய்யப்படுவதாகவும் இதனால் பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே போகிறது.

இதற்கு முன்பு தேசிய முன்னணி அரசாங்கம்  (பிஎன்) ஜிஎஸ்டி வரி சட்டத்தை நாடாளுமன்றத்தில் 118 பிஎன் உறுப்பினர்களின்  ஆதரவோடு நிறைவேற்றியது. 81 பாக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  எதிர்த்து வாக்களித்தனர்.

பிரதமர், டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்  இதற்கு முன்பு கூறுகையில், அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும் ஜிஎஸ்டி வரி அதில்  ஒரு முறையாகும்.


Pengarang :