MEDIA STATEMENT

பிஎன் அரசாங்கம் ஜிஎஸ்டி வரியை பயன்படுத்தி 1MDB அடைந்த ரிம 39 பில்லியன் நஷ்டத்தை ஈடுகட்ட பார்க்கிறது

தேசிய முன்னணி அரசாங்கம் (பிஎன்) தொடர்ந்து மக்களை திசை திருப்பவே முயல்கிறது, மக்களின் வரிப்பணத்தை நிர்வகிப்பதில் பல கோணங்களில் குளறுபடிகள் இருந்தாலும் தவறான தகவல்களை தேசிய ஊடகங்களின் வாயிலாக வழங்கி வருகிறது.

அரசாங்கம் ஜிஎஸ்டி வரியின் மூலமாக ரிம39 பில்லியன் வசூல் செய்திருப்பது 1MDB-இன் நஷ்டத்திற்கு ஈடாக இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன். 6% ஜிஎஸ்டி வரியின் மூலமாக மலேசிய மக்கள் பொருளாதார சுமைகளை எதிர் நோக்கி வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

இதற்கு மாறாக,பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியினர் ஜிஎஸ்டி வரியினால் படும் அவதிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்கிறார்கள்

இந்த மாதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி எதிர்ப்பு மையம் (சி4) 1MDB ரிம 39 பில்லியன் நஷ்டத்தை தவறான நிர்வாகத்தினால் எதிர் நோக்கியது என்றும்
பிஎன் அரசாங்கம் 2016 ஆண்டின் ஜிஎஸ்டி வசூல் ரிம 39 பில்லியன் என்று அறிவிப்பு செய்யும் என தெரிவித்துள்ளது.

இது அதிகமான வரியை மக்களுக்கு விதிப்பதாகவும் குறிப்பாக பி40 பிரிவினரை 6% வரி வசூல் செய்வது 1MDBயை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இல்லை என்றால் தவிர்த்து இருக்கலாம்.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி ஜிஎஸ்டி வரியை அரசாங்கம் அவசர அவசரமாக செயல்படுத்துவது குறித்தும் இதனால் மக்கள் பெரும் சுமைகளை எதிர் நோக்கி வருகிறார்கள், ஆக இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அப்படி மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அளித்தால் ஜிஎஸ்டி வரி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று ஆணித்தரமாக கூறினார்.
இந்நடவடிக்கை மக்களின் துன்பங்களை நீக்கும் என்றும் அவர்களின் வாழ்க்கை செலவீனங்களை களைய உதவும் என்று தெரிவித்தார்.

நூருல் இஸா அன்வர்
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர்


Pengarang :