RENCANA PILIHANSELANGOR

பிஎல்பி உதவித்தொகைகள் விநியோகம் இறுதி கட்டத்தில் இருக்கிறது

ஷா ஆலம், 19 ஏப்ரல்:

கருகிய இலை நோயினால் ( பிஎல்பி) நோயினால்  பாதிக்கப்பட்ட  நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண்மை தொழில் நிரந்தரக் குழு மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜய்டி அப்துல் தாலிப் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரபட்சமின்றி  உதவிகள் வழங்கப்பட்டன என்ற கேள்வி கேள்விக்கு இடமில்லை  ஏனெனில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள் திரட்டும் பணிகள் செம்மையாக நடைபெற்று வருகிறது.

” விவசாய இலாகாவின்  ஆய்வின் படி பிஎல்பி நோயினால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களின் தலைவர்களிடம் சரியான தகவல்களை ஊர்ஜிதம் செய்யும் பணியில் இருப்பதாக தெரிவித்தார். மேற்கண்ட தலைவர்கள் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியலை அனைத்து ஆவணங்களுடன் விவசாய  இலாகாவிடம்  உதவித்தொகைக்கு ஒப்படைக்க வேண்டும். 21 ஏப்ரல் தேதிக்குள் இப்பணிகள் முற்றுபெறும்”, என்று கூறினார்.

மேலும் கூறுகையில், விவசாய  இலாகாவின் பெயர் பட்டியல் மாநில பொருளாதார வடிவமைப்பு பிரிவு  (யுபென்) பணப் பட்டுவாடா பணிகள் மேற்கொள்ளும் என்றும் ஒவ்வொரு லோட்டுக்கும் ரிம9600 வழங்கப்படும் என்று தெரிவித்தார்

 

ZAIDY TALIB (2)

 

 

 

 

 

 

 

 

 

விவசாய மொத்த நிதி ஒதுக்கீடு ரிம942,000 ஆகும் என்று தெரிவித்தார்.

 

@கெஜிஎஸ்


Pengarang :