NATIONAL

பினாங்கு மாநிலம் தேசிய முன்னணி கைப்பற்ற முடியாது

ஷா ஆலம், 20 ஏப்ரல்:

தேசிய முன்னணி  (பிஎன்) பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியிடம்  இருந்து 14வது பொதுத் தேர்தலில்   பினாங்கு மாநிலத்தை கைப்பற்றும் முயற்சிகள்  ஈடேறாது என் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் சூளுரைத்தார்.

மேலும் கூறுகையில் அவர், பின் நிர்வாகத்தில் நடைபெற்ற சம்பவங்கள்  இன்னும் மாநில மக்களின் நினைவில்  இருக்கிறது என்பதை இங்கு பதிவு செய்தார்.

” பிஎன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சுத்தமான  இடம்  அசுத்தமாக மாறிவிடும். கொம்தார் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும், மக்கள் தண்ணீர் கட்டுப்பாடு மற்றும் பினாங்கு கூட்டரசு பிரதேசமாக பிரகடனம் செய்து டத்தோ ஸ்ரீ தெங்கு  அட்னான் தெங்கு மன்சோர் எண்ணதிற்கேற்ப  இயங்கும். ”  என்று உறுதியாக கூறினார்.

மேற்கண்ட பதிலடி, பின் மீண்டும் பினாங்கு மாநிலத்தை கைப்பற்றும் வாய்ப்பு  உள்ளதாக வெளியான ஊடகச் செய்திக்காக விளக்கமளித்தார். 13வது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தை தற்காத்துக் கொண்டது மட்டுமில்லாமல் 30 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது


Pengarang :