PBTSELANGOR

புன்சாக் அலாம் மக்களின் புகார்களுக்கு கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் உடனடி நடவடிக்கை

ஷா ஆலம், 21 ஏப்ரல்:

மக்களின் வசதிகளை முன்வைத்து, கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகெஎஸ்) ஒவ்வொரு புகார்களையும் அக்கறை கொண்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கைகள்  எடுக்கும்.

எம்டிகெஎஸ்-இன்  தலைவரான, முகமட் அஸார் முகமட்  அலி கூறுகையில் புன்சாக் அலாம் மக்களின் புலம்பல்களுக்கு மூல காரணம் மோசமான சாலைகளே ஆகும். இந்த நிலைக்கு மேம்பாட்டு திட்டங்களில் பயன்படுத்தும்   கனரக வாகனங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தூசிகளுமே மூல காரணம்  என்றும், இதற்கு நடவடிக்கைகள் எடுக்க  ஆரம்பித்து விட்டோம் என்று தெரிவித்தார்.

 

 

Azhar MDKS

 

 

 

 

 

 

“மேலும், மாவட்ட மன்றம் வேலை நிறுத்த கட்டளையை  வெளியாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். 7 இருந்து 12 ஏப்ரல் வரை இந்த கட்டளையை வெளியிட்டுள்ளதாகவும் இது  அழுக்கான  மற்றும் குழிகள் நிறைந்த சாலைக்கு மேம்பாட்டு நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.:

முகமட்  அஸார் மேலும் விவரிக்கையில், மன்றம் மேம்பாட்டு நிறுவனத்திற்கு போக்குவரத்து நிர்வாக திட்டத்தின்  அடிப்படையில் சாலை பிரிப்பு அமைக்க பட வேண்டும் என்றும் இஃது சாலை பயனீட்டாளர்களையும் ஊழியர்களையும் பாதுகாக்கும்  என்று தெரிவித்தார்.

 

மேலும் அஸார் கூறுகையில், மீண்டும் சம்பந்தப்பட்ட சிக்கல்கள்  எழுமானால்,  புகார்களை கோலா சிலாங்கூர் மக்கள் புகார் நிர்வாக மையத்திற்கு ஏப்ஸ் மூலம் அனுப்பலாம் என்று கூறினார்.

@கெஜிஎஸ்


Pengarang :