RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் ரிம240,000 சீக்கிய கோவில்களுக்கு வழங்கினார்

பெட்டாலிங் ஜெயா, 23 ஏப்ரல்:

சிறுபான்மை  இனத்தவராக இருந்தாலும் சீக்கிய  இனத்தவர்களின் வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் மான்யங்கள் வழங்கப்படும் என்று 24 சீக்கிய குட்வாராகளுக்கு ரிம240,000 வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மான்யங்களை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் சிவிக் மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வைசாக்கி பொது உபசரிப்பில் கலந்துக் கொண்டபொது வழங்கினார்.

அதற்கு முன்பு அஸ்மின் அலி, மாநில அரசாங்கம் சீக்கியர்களுக்கு ரிம500,000 ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இவை நிகழ்ச்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீக்கிய சமுதாய மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

“சிறுபான்மையினத்தவராயினும் மாநில அரசாங்கம் சிலாங்கூர் மேம்பாட்டிற்காக உதவும்  எல்லா இனங்களையும் பாதுகாக்கும்.” என்று அஸ்மின் அலி தெரிவித்தார்.

 

GUDWARA

 

 

 

 

 

வழிபாட்டு தளங்களின் நிலப்பிரச்சினைகளை தொட்டுப் பேசும் போது மாநில அரசாங்கம் வழிபாட்டு தலங்களை ஊர்ஜிதம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதில் சீக்கிய ஆலயங்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.

இந்த பொது உபசரிப்பில் 3000 மேற்பட்ட பொது மக்கள் கலந்துக் கொண்டனர். பல்வேறு  உணவுகள் பரிமாறப்பட்ட வேளையில் சீக்கிய நடனங்களும் அனைவரையும் மகிழ்ச்சி அடையச்செய்தது.

 

@கெஜிஎஸ்


Pengarang :