NATIONALRENCANA PILIHAN

மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்காக கெஅடிலான் தொடர்ந்து போராடுகிறது

செபராங் ஜெயா – மக்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கும் மாபெரும் மாற்றத்தை நிலைக்கொள்வதற்காக கெஅடிலான் அதன் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் தொடர்ந்து மக்களோடு உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கெஅடிலான் தொடங்கப்பட்டு இத்தனை ஆண்டுகால அரசியல் பயணத்தில் கெஅடிலான் இன்னமும் அதன் இலக்கில் இருந்தும் கொள்கையிலிருந்தும் ஒரு போதும் தடம் மாறாமல் தொடர்ந்து மக்களுக்கான செயல்பாட்டில் விவேகமாய் உயிர்ப்பித்து வருவதாகவும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

கெஅடிலான் மக்களின் மறுமலர்ச்சியில் உருவான கட்சி.மக்களின் எதிர்பார்ப்பையும் தேவையையும் பூர்த்தி செய்யும் உன்னத கட்சியாய்  உருமாற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்றார்.டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வித்திட்ட கெஅடிலான் கட்சி மலேசிய அரசியலில் சிம்மசொப்பனமாய் விளங்குவதாகவும் கூறினார்.

மலேசிய அரசியலில் கெஅடிலான் மாபெரும் அரசியல் சக்தியாய் தற்போது உருப்பெற்றிருப்பதோடு மலேசிய அரசியலில் அம்னோ தேசிய முன்னணிக்கு மாபெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கும் கட்சியாய் ஆளுமை அடைந்திருப்பதாகவும் கூறினார்.

நாட்டின் 14வது பொது தேர்தல் நெர்ங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் ஒற்றுமையாகவும் ஒருமைப்பாட்டோடும் நிலைக்கொள்ள வேண்டும்.நாம் எந்நிலையிலும் நமது இலக்கிலிருந்து பின் வாங்கக்கூடாது  என்றும் அவர் நினைவுறுத்தினார்.

தற்போது நாட்டில் மக்கள் சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநில அரசாங்கம் போன்ற விவேகமான திறன் மிக்க அரசாங்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.இன்றைய மாநில அரசாங்கமாய் இருக்கும் நாம் நாளைய மத்திய அரசாங்கமாய் உருவாவதையே மக்கள் விரும்புவதாகவும் அதுவே அவர்களின் எதிர்பார்ப்பாகவும் இருப்பதாகவும் நினைவுறுத்தினார்.

 

பினாங்கு மாநில கெஅடிலான் மாநாட்டில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கட்சியின் போராட்டத்தை நினைவுக்கூறும் வகையில் புறாக்களை இம்மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா மற்றும் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆகியோர் பறக்க விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

IMG_6304

 


Pengarang :