RENCANA PILIHANSELANGOR

மின்னியல் கார் மற்றும் பேருந்து சிலாங்கூர் சுல்தான் தொடக்கி வைத்தார்

ஷா ஆலாம் – ஷா ஆலாம் மாநகர மன்றம்  அறிமுகம் செய்திருக்கும் மின்னியல் கார் மற்றும் பேருந்து திட்டத்தை சிலாங்கூர் சுல்தான்,சுல்தான் ஷாராப்ஃபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாய் தொடக்கி வைத்தார்.

ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வித்திடும் இந்த மின்னியல் கார்  மற்றும் பேருந்து செயல்பாடு ஷா ஆலாம் மாநகர மன்றத்தில் தூய்மையான மற்றும் மாசு அற்ற சுற்றுச்சூழல் இலக்கின் ஒரு பகுதி என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதனை மாநில சுல்தான் அதிகாரப்பூர்வமாய் தொடக்கி வைத்து அத்திட்டத்திற்கு மேலும் உற்சாகம் அளித்தார்.

மின்னியல் கார் மற்றும் பேருந்தினால் காற்று தூய்மைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வழிகோலும் அதேவேளையில் இத்திட்டம் நன் வரவேற்ப்பையும் பெறுமானால் அஃது விரிவடைவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாய் சிலாங்கூர் சுல்தான் தொடக்கி வைத்த போது அவரோடு அவரது துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிக்காவும் உடன் இருந்த வேளையில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இதற்கிடையில்,ஆரோக்கியமான சுற்றுச்சூழலின் உன்னதத்தை உணர்த்தும் வகையில் வாகனங்கள் பயன்பாட்டினை குறைக்கும் நோக்கில் பொது மக்கள் சைக்கிள் மற்றும் நடந்தும் இந்நிகழ்விற்கு வருகை புரிந்ததை அனைவரும் வரவேற்றனர்.

 


Pengarang :